Monday 28 October 2013

விவசாயிகள் தற்கொலை - குஜராத்தின் விவசாய வளர்ச்சி பற்றிய கோர உண்மை



      மோடியின்,  குஜராத்தில் விவசாய துறை வளர்ச்சி கண்டுள்ளது என்று (அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்றி உத்ரகண்டில் ஒரே நாளில் 15,000 நபர்களை காப்பாற்றியதை போல) தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசாங்கம் கைவிட்டதாலும்   அதிக கடன் சுமை காரணமாகவும் தற்கொலை மூலம் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்கள்.  இந்த கோரசம்பவமானது பல மட்டங்களில் மறைந்துள்ள அதன் கொடூர உணர்வின்மையையும் (காட்டுமிராண்டி தனத்தையும்) மனித உயிர்களை அலட்சியமாக கருதுவதையும் அம்பலப்படுத்துகின்றன.  2003  - 2007 க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 489 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதற்கு பின்னர் மோடி நடத்திய விகாஸ் யாத்திரை,  துடிப்பான குஜராத் (Vibrant Gujarat)போன்ற மாநாடுகள் எத்தனை? ஏன் இவைகளால் விவசாயிகள் தற்கொலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை? 2009-2012 இடைப்பட்ட காலத்தில் 112 விவசாயிகள் கூடுதலாக தற்கொலை செய்துகொண்டார்கள், 2012-ல் பருவமழை பொய்த்ததின் காரணமாக, 2012 அக்டோபர்/நவம்பர் க்கு பின்னர் 40-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன,  கடந்த 10 ஆண்டுகளில் அரசாங்க புள்ளி விபரங்களின்படி 641 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலையானது குஜராத்தின் “விவசாய வளர்ச்சி” என்ற மோடியின் மிகைபடுத்தப்பட்ட தம்பட்டங்களை துகிழுரித்து காட்டுகிறது.


 குஜராத் – விவசாயிகள் தற்கொலை

வருடம்
பதிசெய்யப்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கை
2003-2007
487
2008-2012
112
2012 – தற்பொழுது வரை
40
மொத்தம்
641

தற்கொலைகளின் மொத்த எண்ணிக்கை 641 ஆக இருப்பதினால், இதை பற்றிய விபரங்களை மறைக்கவும் தற்கொலைகளை பதிவு செய்யாமல் இருப்பதையும் உறுதிசெய்யவேண்டுமென காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்க்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த கோர சம்பவம் நமக்கு உணர்த்தும் உண்மைகள் 1) 600க்கும் மேற்பட்ட அரசாங்கத்தால் கைவிடப்பட்ட ஏழை விவசாயிகள் தங்கள் வாழ்வை தற்கொலை மூலம் முடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள், 2) 2005-ல் குஜராத் மாநில நிர்வாகத்திற்கு அங்கு நிலவுகின்ற துயர நிலைமைகள் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்ட போதிலும் அதை கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு செய்திருந்தால் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு கட்டங்களாக நடைப்பெற்ற விவசாய தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.  3) இறுதியாக குஜராத்தில் விவசாய வளர்ச்சி என்று போலி ஆதாரங்கள் மூலம் மோடி அரசும் மக்கள் தொடர்பு நிறுவனங்கலும்  சேர்ந்து பொய் பிரச்சாரத்தின் மூலம் இறந்த விவசாயிகளை சிறுமைபடுத்தியுள்ளது. 

செளராஷ்டிராவில் நிகழும் விவசாயிகள் தற்கொலைகள் குறித்து இராகேஸ் சர்மா எனும் ஆவண பட தயாரிப்பாளர் “கேது மோரா ரெ” எனும் ஆவண படத்தை வெளியிட்டுள்ளார், அவர் இது குறித்து கூறும் போது “இங்கு பிரச்சனை என்னவென்றால் காவல்துறை அதிகாரிகள் விவசாய தற்கொலைகளை துல்லியமாக கணக்கிட்டு பதிவு செய்வதில்லை, எனவே இத்தவறான பதிவுகளை சரி செய்வதுதென்பது  இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கஷ்டமான ணியாகும்” என்று கூறினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் அதிகாரி Frontline பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் “விவசாயிகள் தற்கொலைகளைகளுக்கு “விளைச்சல் குறைந்தது” தான் கரணம் என்பதற்க்கு பதிலாக “தற்செயலாக நிகழ்ந்த இறப்பாக” பதிவு செய்யுமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் கனுபாய் கன்சாரியா எனும் பி.ஜே.பி எம்.ல்.ஏ குஜராத் மாநிலத்தின் விவசாயம் மற்றும் உப்பு துறையில் உள்ள பிரச்சனைகளை வெளிக்கொண்டுவந்ததிற்காக கட்சியில் இருந்து மோடியால் நீக்கப்பட்டார். இது குறித்து ஒரு விவசாயி “அவர் (மோடி) தன் கட்சிக்காரரையே சகித்துக் கொள்ள முடியாத போது  அவர் எங்களுக்காக என்ன செய்யபோகிறார்? என்று கூறினார்.  மோடிக்கு, மக்கள் தொடர்பு சாதங்களின் ஆதரவு எல்லையற்றது. மோடியின் விவசாய வளர்ச்சி என்று மோடியால் மிகைப்படுத்தப்படும் அதே வேளையில் சௌராஷ்ட்ரா பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி  உள்ளனர். இங்கே  ஒரு பொய் விவசாயிகளின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

நன்றி :


No comments:

Post a Comment